Posts

Showing posts from June, 2025

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் - அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய 'டிராகன்' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா

Image
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.   சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.  இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள்,  விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான்,  ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள்,  இயக்குநர், ...

ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நடிகர் விஷ்ணு விஷால், " விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி க...

பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா

Image
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர். நடிகர் முத்துக்குமார் முத்துக்குமார் அவர்கள் பேசும்போது, "பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய நண்பனின் மகன் சூர்யா நடிக்கும் முதல் படம். இந்த படத்தில் நானும் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். யார் என்ன சொன்னாலும் நேரடியாக சென்று கொண்டே இருங்கள் சூர்யா. நீங்கள் மிகப்பெரிய ஆளாக வருவீர்கள்! வாழ்த்துக்கள். ஒரு மாமனாக வாழ்த்துகிறேன்". பாடலாசிரியர் விவேகா அவர்கள் பேசும்போது, "மற்றவர்கள் படத்திலேயே அதிரடியான சண்டைக் காட்சிகள் வைக்கும் அனல் அரசு அவர்கள் தன்னுடைய படத்தில் இன்னும் சிறப்பாக வைத்துள்ளார். சாம் சி எஸ் அவர்கள் பிரமா...

இயக்குநர் ராமின் ’பறந்து போ’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Image
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.   நடிகர், இயக்குநர் கஸ்தூரிராஜா, "இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை! எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்" என்றார்.  இயக்குநர் விக்ரமன், " இயக்குநர் ராம் மிக அற்புதமான படங்களை கொடுத்தவர். ராம் மற்றும் மிர்ச்சி சிவா காம்பினேஷன் எப்படி வொர்க்கவுட் ஆகும் ...

நடிகர் சித்தார்த்தின் ‘3 BHK’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Image
சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அழகான உணர்வுகளுடன் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இதயத்தைத் தொடும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்ளிட்டப் பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இயக்குநர் ராம், “ஜூலை 4 எனக்கும், சித்தார்த், அருண் மூவருக்கும் முக்கியமான நாள். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா எனது அசிஸ்டெண்ட்டாக இருந்தார். ‘தங்க மீன்கள்’ படம் நான் எடுத்த சமயத்தில் அருண் என்னிடம் வந்தார். அவர் வந்ததும் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘தங்க மீன்கள்’ வெளியாகுமா இல்லையா என்று இருந்த சமயத்தில் பலரும் என்னை விட்டு போனாலும் அருண் என்னுடன் தொடர்ந்து பயணித்தார். அவர் மூலமாகதான் கோடம்பாக்கத்தில் பலருடைய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவரைப் பார்த்த...

லவ் மேரேஜ் விமர்சனம்

Image
  லவ் மேரேஜ் ஒரு காமெடி-குடும்ப டிராமா, தெலுங்கு படமான அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம் படத்தின் ரீமேக். திருமணத்தை மையமாகக் கொண்டு, ஊரடங்கு சூழலில் மதுரையைச் சேர்ந்த மாப்பிள்ளை வீட்டார், கொங்கு வட்டாரப் பெண் வீட்டில் சிக்கிக்கொள்ளும் காமெடி களத்தை சுவாரஸ்யமாக முயற்சிக்கிறது. ஆனால், முழுமையாக ஈர்க்கவில்லை. பலங்கள்: கதைக்களம் : ஊரடங்கு சூழலில் இரு குடும்பங்களின் சந்திப்பு, காமெடிக்கு ஏற்ற அருமையான வாய்ப்பை அளிக்கிறது. திருமணம் தொடர்பான சமூகப் பிரச்னைகளை சீரியஸாகவும், காமெடியாகவும் கலந்து சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது. நடிப்பு : விக்ரம் பிரபு திருமணக் கனவுடன் தவிக்கும் ராமச்சந்திரனாக பொருந்துகிறார். அறிமுக நாயகி சுஷ்மிதா பட், உணர்வுகளை உடல்மொழியில் வெளிப்படுத்தி ஈர்க்கிறார். மீனாட்சி தினேஷின் துறுதுறுப்பான நடிப்பு மற்றும் அருள்தாஸின் துணைப் பாத்திரம் தனித்து நிற்கின்றன. தொழில்நுட்பம் : மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு மற்றும் முரளியின் கலை இயக்கம், ஒரே வீட்டில் நடக்கும் கதையை சுவாரஸ்யமாக்குகின்றன. பரத் விக்ரமனின் எடிட்டிங் சிறப்பு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை காட்சிகளைத் தாங்கு...