Posts

Showing posts with the label Gajaana Movie Realese Date

யுத்த காரணமாக ‘கஜானா’ படத்தின் திரையரங்க வெளியீட்டை நிறுத்த படக்குழு முடிவு!

Image
யுத்த மனநிலையில் இருக்கும் மக்களுக்காக ‘கஜானா’ படம் நிறுத்தம்! - மறுவெளியீட்டு தேதி விரைவில் அறிவிப்பு யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், சாந்தினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், பிரமாண்டமான ஃபேண்டஸி அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படத்தை ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து இயக்கியுள்ளார். கோடை விடுமுறை கொண்டாட்டமாக, இப்படத்தை மே 9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்த படக்குழு, அறிவித்தது போல் நேற்று (மே 9) படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதோடு, நேற்றே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு திரையிடல் காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் வெகுவாக பாராட்டியதோடு, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு அனிமேஷன் காட்சிகள் நிறைந்த, சுவராஸ்யமான ஃபேண்டஸி படத்தை பார்த்தோம். நிச்சயம் இந்த படம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்று பாராட்டினார்கள். இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் யுத்த மனநிலைக்கு மாறியுள்ளனர். இந்த ...