Posts

Showing posts with the label Housemates

“ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல்!

Image
ZEE5 தனது அடுத்த தமிழ் ஓடிடி வெளியீடாக, ஹாரர் – ஃபாண்டஸி – காமெடி கலவையுடன் உருவான “ஹவுஸ் மேட்ஸ்” திரைப்படத்தை செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. T. ராஜா வேல் இயக்கத்தில், S. விஜயபிரகாஷ் தயாரிப்பில் SK Productions சார்பில் உருவான இப்படத்தில் தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா, அப்தூல் லீ, மாஸ்டர் ஹெண்ட்ரிக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரேமம், நேரம் படங்களின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதையில், புதிதாகத் திருமணம் ஆன தம்பதியினர் (தர்ஷன் – ஆர்ஷா) குடிபெயர்ந்த அபார்ட்மெண்டில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், வேறு காலவரிசையைச் சேர்ந்த குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. குடும்பக் கதையிலிருந்து துவங்கி, சஸ்பென்ஸ், நகைச்சுவை, உணர்ச்சி, ஃபேண்டஸி கலந்த வித்தியாசமான திரைக்கதையாக கதை நகர்கிறது. “ஹவுஸ் மேட்ஸ்” ZEE5 டிஜிட்டல் பிரீமியர் – செப்டம்பர் 19 காண தவறாதீர்கள்!