Posts

Showing posts with the label Vijay Sethupathi

96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்

Image
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி – ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா – ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனித்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்த...

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!

Image
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’. இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர். ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்...

தலைவன் தலைவி திரைவிமர்சனம்

Image
  கதைக்களம் : ஆகாசவீரன் (விஜய் சேதுபதி) தனது குடும்பத்துடன் ஹோட்டல் ராகவார்த்தினி என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பேரரசி (நித்யா மேனன்) உடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது, ஆகாசவீரனின் குடும்பம்—தந்தை (சரவணன்), தம்பி மற்றும் அவரே ரவுடிகள் என்பது தெரிய வருகிறது. இதனால் நித்யாவின் குடும்பம் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறது. ஆனால், நித்யா தன் குடும்பத்தை எதிர்த்து ஆகாசவீரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்குப் பின், ஆகாசவீரனின் தந்தை நித்யாவை ஹோட்டல் கல்லாப் பெட்டியை பார்க்கச் சொல்ல, இதுவரை அதை கவனித்து வந்த ஆகாசவீரனின் அம்மாவுக்கு (தீபா) ஈகோ பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், ஹோட்டலின் பெயர் நித்யாவின் பெயருக்கு மாற்றப்படுவதால், ஆகாசவீரனின் தங்கைக்கும் கோபம் வருகிறது. இதனால், அம்மாவும் தங்கையும் சேர்ந்து நித்யாவை வேலைக்காரி போல் நடத்த, இதைப் பார்க்கும் நித்யாவின் அம்மா ஆத்திரமடைகிறார். இதனால் ஆகாசவீரன்-பேரரசி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாலும், சண்டைகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் ஆகாசவீரனுக்கு வேறு திர...