Posts

Showing posts with the label Dhanush

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

Image
தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது  படக்குழு.  இந்நிகழ்வினில்...

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் #D55 “ஓம்” பட தலைப்பு அறிவிப்பு விழா, கோலாகலமாக நடைபெற்றது!

Image
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் #D55 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்திற்கு “ஓம்” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  R Take Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படைப்பாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில்  Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது..,  “முதலில் இயக்குநருக்கும் தனுஷ் சாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் உங்களிடம் நன்றிக்கடன்பட்டவனாக இருக்கிறேன், சார். இந்த திரைப்படம் திரையுலகில் உருவாகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும். என் திரைப்பயணத்தில் இதுவே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்று நான் நினைக்கிறேன்...

தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Image
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் , படத்தின் பிரம்மாண்டம், மனநிலை மற்றும் கதை ஆழத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, விறுவிற...

குபேரா - திரை விமர்சனம்: ஒரு மனிதநேய காவியம்

Image
  விமர்சன சுருக்கம்: சேகர் கம்முலா இயக்கிய குபேரா – உணர்வுப்பூர்வமான, சமீபத்திய சமூக அரசியல் அடையாளங்களோடு கூடிய ஒரு சினிமா. ஜிம் சர்ப் நடித்த வில்லன் ஒரு பில்லியன் டாலர் எண்ணெய் ஒப்பந்தத்தை கையிலெடுக்க, முன்னாள் சிபிஐ அதிகாரி நாகர்ஜுனா நான்கு பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கிறார் – இவர்கள் அதிகாரிகள் கண்களில் இல்லாதவர்கள். இவர்களில் ஒருவராக தனுஷ் களத்தில் இறங்கி, தனது வண்ணமயமான ஆன்மாவாலும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களாலும், “குபேரா” என்ற பெயருக்கே நியாயமான பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறார். நடிப்பு சிறப்புகள்: தனுஷ் : இவரது ஒவ்வொரு நடையும், உணர்வும் இயல்பாகவும் ஆழமாகவும் வெளிப்படுகிறது. பிச்சைக்காரனாகவே அவதாரம் எடுத்து, ஹீரோ சில்லறையைத் தவிர்த்து, உண்மையான மனிதனாக பளிச்சென்றுள்ளார். நாகர்ஜுனா : பச்சையாணையாக இருந்தவர், வாழ்க்கையில் செய்த தவறுகளுக்குள் சிக்கி, அந்தக் குற்றவுணர்வுடன் மாறுபடும் மனநிலையை அசத்தலாக காட்டுகிறார். ராஷ்மிகா மந்தனா : மிக எளிமையான வேடத்தில், மிகுந்த உணர்வோடு நடித்துள்ளார். ஜிம் சர்ப் : ஹாலிவுட் தரத்தில் ஒரு வில்லன் – பாரபட்சமற்ற தீமையை தூக்கிப் ப...