Posts

Showing posts with the label All Set to Enthrall Audiences

ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் 'அந்த ஏழு நாட்கள்'!

Image
தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது. இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.  காதல் - த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'அந்த 7 நாட்கள்' திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.  படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பகிர்ந்து கொண்டதாவது, "நான் படம் தயாரிக...