Posts

Showing posts with the label Actress

ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நடிகர் விஷ்ணு விஷால், " விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி க...

தமிழ்செல்வி மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா?

Image
விஜய் டிவியின் முன்னணி நெடுந்தொடரான சின்ன மருமகள், தமிழ்செல்வியின் உறுதியான பயணத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. தற்போது, மருத்துவராகும் கனவை நிறைவேற்ற 1 லட்சம் ரூபாய் திரட்ட, தமிழ்செல்வி மொய் விருந்து நடத்தத் திட்டமிடுகிறார். ஆனால், சாவித்திரியின் கிடா விருந்து இதற்கு சவாலாக உள்ளது. இந்த பரபரப்பான திருப்பத்தில், தமிழ்செல்வி தன் கனவை நோக்கி வெற்றி பெறுவாரா? சாவித்திரியின் திட்டத்தை முறியடித்து, தேவையான தொகையை திரட்டுவாரா? இந்த உச்சகட்ட கட்டத்தில், தமிழ்செல்வியின் போராட்டம் ஒவ்வொரு குடும்பத்தின் உணர்வையும் பிரதிபலிக்கிறது. தமிழக மக்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக தமிழ்செல்வியை பார்க்கும் இந்த நேரத்தில், அவரது கனவு வெல்லுமா என்பதை அறிய, சின்ன மருமகள் தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், Disney+ Jio Hotstar OTT தளத்திலும் கண்டு ரசியுங்கள்!