Posts

Showing posts with the label Deva dharshini

தி மம்மி ரிட்டர்ன்ஸ்” படம், பூஜையுடன் துவங்கியது !

Image
Pepin de Raisin Productions சார்பில், P. J. கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர் சிங் இயக்கத்தில் உருவாகும், அழகான காமெடி ஃபேமிலி எண்டர்டெயினர் “தி மம்மி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம், படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, விமரிசையான பூஜையுடன், இன்று கோலாகலமாக துவங்கியது.  இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இயக்குநர் I. அகமது இவ்விழாவில் கலந்துகொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த 1990 களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன்.  அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் மையம். வயிறு வலிக்க சிரித்து மகிழும் காமெடியுடன், அனைவரும் ரசிக்கும் அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்குகிறார் ஜெய் அமர் சிங்.  இந்த படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா (விஜய் டிவி) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு கட்டமாக...

பீனிக்ஸ் - திரைவிமர்சனம்

Image
கதைக்களம்: சென்னை கடற்கரையோரத்தில் வாழும் சூர்யா சேதுபதி, எம்.எல்.ஏ. சம்பத்தை கொலை செய்கிறார். 17 வயதே ஆனதால் அவர் சிறுவர் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சம்பத்தின் மனைவி வரலட்சுமி சரத்குமார், தன் ஆதரவாளர்கள் மூலம் சூர்யாவை கொல்ல முயற்சிக்கிறார். இந்த கொலை முயற்சிகளில் இருந்து சூர்யா தப்பித்தாரா? கொலைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பது படத்தின் மையக் கதை.நடிப்பு: சூர்யா சேதுபதி: நாயகனாக மிரட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் உடல் மொழி மற்றும் பார்வையால், இரண்டாம் பாதியில் பக்குவமான நடிப்பால் கவர்கிறார். வரலட்சுமி சரத்குமார் & சம்பத்: வில்லத்தனத்தில் அசத்தல். தேவதர்ஷினி: தாய் பாசத்தில் நெகிழ வைக்கிறார். அபி நட்சத்திரா: பரிதாபமான கதாபாத்திரத்தில் அனுதாபம் பெறுகிறார். ரிஷி: அடியாளாக கவனிக்க வைக்கிறார். இயக்கம்: இயக்குனர் அனல் அரசு, பழிக்கு பழி கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ், பிரமிக்க வைக்கின்றன. திரைக்கதை ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பை தக்கவைக்கிறது.இசை: சாம...