அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11. தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர். சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், இந்த சீசனில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர், இந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நடுவர்கள் குழுவில் இணைகிறார். மே...