Posts

Showing posts with the label Vijay Antony

நூறு சாமி - திரை விமர்சனம்

Image
42 வயதில் ஒரு விதவை தாய் மறுமணம் செய்துகொள்ளும் சசியின் நூறு சாமி  இரு பையன்களை கஷ்டப்பட்டு ஆளாக்கும் விதவையான ஸ்வாசிகாவிற்கு “நாம் ஒரு மறுமணம் முடித்தால் என்ன” என்ற ஆசை எழுகிறது. முதலில் முதலாமாண்டு கல்லூரி படிக்கும் தன் மகன் அஜயிடம் தெரிவிக்கிறார். மகன் பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்க அவர் அதிர்ந்து போகிறார். பின் நான்காண்டுகள் கழித்து மனம் மாறும் மகன் தன் அம்மாவிற்கு மறுமணம் செய்துவைக்க முயற்சிக்கிறான். இளையமகனும் அதற்கு ஒத்திசைகிறான். ஆனால் சுற்றமும் சொந்தமும் அதை எதிர்க்கிறது. எதிர்ப்பை மீறி இரு இளைஞர்கள் தங்கள் அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்தார்களா என்பதே படத்தின் மீதி திரைக்கதை இந்த வருடம் சிறந்த நடிகைக்கான தேசியவிருதை இப்போதே ஸ்வாசிகாவிற்கு எழுதி வைத்துவிடலாம். அந்தளவிற்கு நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். விஜய் ஆண்டனியின் கெஸ்ட் அப்பிரியன்ஸ் ஓரளவு நல்லபலனை தந்துள்ளது. அஜய் இன்னுமே ஆழமான நடிப்பைக் கொடுத்திருக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. பாலாஜி சக்திவேல் அமர்க்களமாக நடித்துள்ளார். கருணாஸ் உள்ளிட்ட பிற கேரக்டர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள...

சக்தி திருமகன் – திரை விமர்சனம்

Image
ஒரு கதாநாயகனின் கேரக்டரில் சிறிய புதுமை இருந்தாலே அந்தப்படம் வேறுபடுகிறது. இயக்குநர் அருண்பிரபு எழுதிய சக்தி திருமகன் அதற்குச் சிறந்த உதாரணம். தலைமைச் செயலகத்தில் தரகு வேலை செய்பவராக விஜய் ஆண்டனி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சினிமாவில் அடிக்கடி வராத பின்னணி என்பதால் ஆர்வம் உண்டாகிறது. அதிகாரிகளின் நகர்வுகள், அரசியல் அசைவுகள் அனைத்தையும் உள்ளங்கையில் வைத்தவர் போலக் காட்சியளிக்கும் இந்த கேரக்டர், ஹீரோவின் தனித்தன்மையை உறுதி செய்கிறது. விஜய் ஆண்டனி நடித்த விதம் குறிப்பிடத்தக்கது. உடல்மொழி, உரையாடல் மாடுலேசன், கேரக்டருக்கான தீவிரம் ஆகிய அனைத்தும் சிறப்பாக பொருந்தியுள்ளன. சாதாரண ஹீரோ கேரக்டரிலிருந்து விலகி, அதிகாரம், அரசியல், தரகு வேலை ஆகிய சாயல்களை அவர் சுமூகமாகக் கலந்துள்ளார். வாகை சந்திரசேகர் போன்ற மூத்த நடிகர்களின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. காதல் ஓவியம் புகழ் கண்ணனும் பவர்ஃபுல் வில்லன் கேரக்டரில் வலிமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். தொழில்நுட்ப தரப்பில், ஒளிப்பதிவாளர் தொடர்ந்து நல்ல தரத்தைத் தக்கவைத்துள்ளார். குறிப்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் கலரிங், ஷாட் கம்போசிஷன் பார...

மார்கன் விமர்சனம்

Image
  மார்கன் ஒரு துப்பறியும் த்ரில்லர், அறிவியல் கலந்த பேன்டஸி உறுப்புகளுடன் சித்தர்களின் சூப்பர் பவர் கோணத்தை இணைத்து சுவாரஸ்யமாக முயற்சித்திருக்கிறது. சென்னையில் நிகழும் மர்மமான கொலை, மும்பையில் இதே பாணியில் அனுபவம் பெற்ற காவல் அதிகாரி துருவ் (விஜய் ஆண்டனி), மற்றும் அசாதாரண ‘Eidetic Memory’ திறன் கொண்ட தமிழறிவு (அஜய் திஷான்) ஆகியோர் மையமாகக் கொண்ட கதை, திருப்பங்களுடன் நகர்கிறது. பலங்கள்: கதைக்களம் மற்றும் முயற்சி : இயக்குநர் லியோ ஜான் பால், வழக்கமான கொலை வழக்கு கதையை ‘சித்தர்களின் சக்தி’ மற்றும் அறிவியல் கோணங்களுடன் கலந்து புதுமையாக்கியிருக்கிறார். ‘மெமரி ரிக்கவரி’ காட்சிகள், சிசிடிவி காட்சிகளின் டென்ஷன், விசாரணை முறைகள் ஆகியவை திரைக்கதையை உயர்த்துகின்றன. நடிப்பு : விஜய் ஆண்டனி அளவான நடிப்புடன் கதையை முன்னெடுக்கிறார். அஜய் திஷான் தனது பாத்திரத்தின் வளர்ச்சியில் முத்திரை பதிக்கிறார். மகாநதி சங்கரின் நகைச்சுவை, அர்ச்சனா மற்றும் கனிமொழியின் நடிப்பு ஆகியவை படத்திற்கு பலம். தொழில்நுட்பம் : விஜய் ஆண்டனியின் பின்னணி இசை அமானுஷ்ய உணர்வைத் தருகிறது. யுவா.எஸ்-இன் ஒளிப்பதிவு குற்றக் காட்சிகளு...