வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப்சீரிஸ்
(Movie Scroll) மூவி ஸ்க்ரோல் சார்பில் SD.சோமு தேவ் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ (He is pregnant). ஷங்கர் நாகதேவன் இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் விஜய் டிவி புகழ் நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ரஞ்சனா கதாநாயகி நடிக்க, தீபா சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சந்துரு, வசந்த், சிரில், வேலு, பவி, மணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஷ்ணுமணி வடிவு ஒளிப்பதிவு செய்ய, வசந்த் தருண் இசையமைத்துள்ளார்.. படத்தொகுப்பை இயக்குநர் ஷங்கர் நாகதேவனே மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பையும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது.. இயக்குநர் சங்கர் நாகதேவன் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இவர் இயக்கிய ‘அவள் பெயர் ஐட்டம்; என்கிற குறும்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. யூ ட்யூப்பிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ‘ஹி இஸ் பிரெக்னன்ட்’ வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப்சீரிஸ் குறித்து இயக்குநர் ஷங்கர் நாகதேவன் கூறும்போது, “க...