Posts

Showing posts with the label couple friendly movie review

கப்பிள் பிரண்ட்லி – திரை விமர்சனம்

Image
நீண்ட நாட்கள் கழித்து திரையில் ஒரு காதல் வேர் பிடித்து, கிளை விரித்து, நிழல் தந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சமீபத்திய பல காதல் படங்கள் தராத ஒரு நிறைவை இந்த படம் நமக்குத் தருகிறது என்பதே உண்மை. வீடுகளுக்கு இன்டீரியல் (Interior) வேலைகள் எடுத்து முன்னேற வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வருகிறான் நாயகன். வாழ்க்கை அவனை வறுமையால் சோதிக்கிறது. அதே சமயம், ஐடி துறையில் வேலை பெற்று வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற கனவுடன் வேலை தேடி அலைகிறாள் நாயகி. இருவரும் ஒரு இக்கட்டான சூழலில் சந்திக்கிறார்கள். நாயகியின் வருகைக்குப் பிறகு நாயகனின் வாழ்க்கை மேல்நோக்கி நகரத் தொடங்குகிறது. கனவுகள் வேரூன்றி நிம்மதியின் நிழல் பரவத் தொடங்கும் நேரத்தில் திடீரென ஒரு இருள்மேகம் அவர்கள் வாழ்க்கைக்குள் புகுந்து விடுகிறது. அந்த இருள் கலைந்ததா? காதல் வென்றதா? என்பதே மீதிக் கதையின் கரு. கதையின் நாயகனாக Santhosh Shoban தனது கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்துள்ளார். தெலுங்கு நடிகர் என்றாலும் சில காட்சிகளிலேயே நம்மூரு பையன் போல மனதில் ஒட்டிக்கொள்கிறார். நாயகியாக Manasa Varanasi அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ...