EMI படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளீட்டுவிழா கலகலப்பாக நடைபெற்றது
நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு.. சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள படம் " EMI " மாதத் தவணை ". இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. தற்போதைய உலகில், 20,000 ரூபாயில ஒரு மொபைல் வாங்கவேண்டுமானால் கூட, அதை முழு பணத்தைக் கொடுத்து யாரும் வாங்குவது இல்லை, எல்லோரும் இஎம்ஐ ல போட்டுத் தான் வாங்குகிறார்கள். இப்போது லோ கிளாஸ், மற்றும் மிடில் கிளாஸ், ஹைகிளாஸ் என அவங்க அவங்க தகுதிக்கு தகுந்த மாதிரி ஏதோ ஒன்னு, காரோ, பைக்கோ, இஎம்ஐ போட்டு தான் வாங்குகிறார்கள். இந்த மாதிரி இஎம்ஐ வாங்கவேண்டுமானால் அவங்களுக்கு சூருட்டி கையெழுத்து ஒருத்தர் போடவேண்டும், அப்போதான் தான் அவர்களுக்கு இஎம்ஐ -ல ஈசியா லோன் கிடைக்கும். இந்த மாதிரி லோன் எடுத்துட்டு போயிட்டு ரெண்டு மூணு மாசம் தவணை கட்டவில்லையென்றால் மேனேஜ...