Posts

Showing posts with the label Vadivelu

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

Image
தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது  படக்குழு.  இந்நிகழ்வினில்...

மாரீசன் திரை விமர்சனம்

Image
கதைக்களம் : பகத் பாசில் ஒரு திருடனாக, சிறையில் இருந்து விடுதலையாகி மீண்டும் திருட்டு வேலையில் ஈடுபடுகிறார். ஒரு வீட்டில் திருட செல்லும் போது, வடிவேலு தனது மகனால் சங்கிலியால் கட்டப்பட்டு மறதி நோயால் பாதிக்கப்பட்டவராகத் தோன்றுகிறார். வடிவேலு, பகத்திடம் தன்னைக் காப்பாற்றினால் ATM-இல் பணம் எடுத்துத் தருவதாக உறுதியளிக்கிறார். பகத் இதைப் பயன்படுத்தி வடிவேலுவின் கணக்கில் உள்ள 25 லட்ச ரூபாயைத் திருட முயல்கிறார். ஆனால், வடிவேலு சந்திக்க விரும்பும் நபர்கள் அனைவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட, வடிவேலுவின் மறதி உண்மையா அல்லது நாடகமா என்பது கதையின் மைய மர்மமாக மாறுகிறது. படத்தின் அலசல் : படத்தின் ஆரம்பக் காட்சி, ஒரு எலி பாம்பிடம் மாட்டிக்கொள்ளும் குறியீடாக, கதையின் மையத்தை அழகாக அறிமுகப்படுத்துகிறது. முதல் பாதி ஒரு பீல் குட் பயணமாக, பகத் மற்றும் வடிவேலுவின் கதாபாத்திரங்களுக்கு இடையேயான வேதியியலை சுவாரசியமாகக் காட்டுகிறது. இடைவேளையில் வரும் திருப்பம் கதையை ஒரு த்ரில்லராக மாற்றி, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்க்கப்பட்டவையாக இருப்பதும், பதற...