Posts

Showing posts with the label Roshini Haripriyan

மெட்ராஸ் மேட்னி - திரைவிமர்சனம்

Image
கதை மையம்: ‘மெட்ராஸ் மேட்னி’ ஒரு சாமானிய ஆட்டோ ஓட்டுநரான கண்ணனின் (காளி வெங்கட்) வாழ்க்கையை, அறிவியல் புனைவு எழுத்தாளர் ஜோதி ராமையாவின் (சத்யராஜ்) பார்வையில் சொல்லும் முயற்சி. கண்ணனின் குடும்பம், பொருளாதார நெருக்கடிகள், உறவுகளின் ஏற்ற இறக்கங்கள், உணர்வுப் பிணைப்புகள் என அன்றாட வாழ்வின் சவால்களைப் பேசும் இந்தப் படம், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் முதல் முயற்சி. பலங்கள்:  காளி வெங்கட் கண்ணனாக வாழ்ந்திருக்கிறார். மிடில் கிளாஸ் மனிதனின் பாசம், வேதனை, அவமானம் என அனைத்தையும் நுணுக்கமான நடிப்பால் பதிவு செய்கிறார். ஷெல்லியின் மௌனமான, முதிர்ந்த நடிப்பு மனதைத் தொடுகிறது. விஷ்வாவின் இளமைத் துடிப்பும், ரோஷினி ஹரிபிரியனின் இறுதிக் காட்சியின் உணர்வுப் பங்களிப்பும் கவனிக்க வைக்கின்றன. ஆனந்த் ஜி.கே-யின் யதார்த்தமான ஒளிப்பதிவும், சதீஷ்குமாரின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம். ஜாக்கியின் கலை இயக்கம் மற்றும் நந்தினி நெடுமாறனின் ஆடை வடிவமைப்பு கதையின் உண்மைத்தன்மையை உயர்த்துகின்றன. ‘பூமர் அங்கிள்’ காமெடி, ஆயாவின் கதை, ஊறுக்காய்க்காரர், தினேஷின் நாய் பாசம், 90ஸ் அக்கா - 2கே தம்பி உரையாடல்கள், ப...