Kiss – திரை விமர்சனம்
“முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் காதல் எத்தனை பேருக்கு வாய்க்கிறது?” என்ற வரிகளை நினைவுபடுத்தும் வகையில், Kiss காதலை மையமாகக் கொண்டிருந்தாலும், அதில் புதுமையான புது திருப்பங்கள் இருக்கின்றன. ஹீரோ கவின் , தன் கடந்தகால பாவத்தின் விளைவாக ஒரு பேண்டஸி பவரைப் பெறுகிறார். அந்த பவரால், காதலர்கள் முத்தமிடுவதைப் பார்த்தாலே அவர்களின் எதிர்காலத்தை அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் காதலை வெறுப்பவனாக வாழ்ந்த அவர், ஒருநாள் உண்மையான காதலில் சிக்கும்போது அந்தப் பவர் தன் காதலியையே ஆபத்துக்குள்ளாக்கும் என்பதை உணர்கிறார். அந்த நிலையில் காதலியை உதறுகிறார். பின்னர் காதல் அவரை மீண்டும் சேர்க்கிறதா என்பதே கதை. கவின் அசால்டாக, நகைச்சுவை கலந்த ஸ்டைலில் கேரக்டரை உயிர்ப்பித்துள்ளார். ஹீரோயின் அழகிலும் நடிப்பிலும் சமமாக நிற்கிறார். விடிவி கணேஷ் படத்தின் நகைச்சுவை டிபன்ஸ்; கதை தடுமாறாமல் காப்பாற்றியிருக்கிறார். ஆர்.ஜே. விஜய் நல்ல கவுண்டர்கள் கொடுக்கிறார். தேவயானி , கெளசல்யா உள்ளிட்டோரின் எமோஷனல் காட்சிகள் சில இடங்களில் அதிக நாடகத்தன்மை கொடுத்தாலும், பெரும்பாலும் வேலை செய்கிறது. இசை காதலுக்கே...