குயிலி - திரைவிமர்சனம்
கதைக்களம்:
1980-90களில் ஒரு அழகிய கிராமத்தில் பிறந்து வளரும் குயிலி (சிறு வயது: தஷ்மிகா லெக்ஷ்மண், பெரியவர்: லிஸி ஆண்டனி), தனது அருகில் வசிப்பவரை காதலித்து திருமணம் செய்கிறார். கணவர் மது அருந்த மாட்டேன் என சத்தியம் செய்தாலும், வேலையின்மையால் தினக்கூலி வேலைக்கு சென்று மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இதனால் ஏற்படும் சண்டையில் குயிலியின் கணவர் கொல்லப்பட, மகனுடன் தனியாகிறார் குயிலி. கிராமத்தை மதுவால் கெடுக்கும் சுரேஷின் சாராய ஆலையை மூடுவதற்கு குயிலி போராட்டம் தொடங்குகிறார். இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாரா என்பது படத்தின் மீதிக்கதை.
தஸ்மிகா லிசி ஆண்டணி நடிப்பு: லிஸி ஆண்டனி: குயிலியாக தனது தைரியமான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். மகனை படிக்க வைக்க போராடும் காட்சிகளில் உணர்ச்சிகரமாக நடித்து கண்கலங்க வைக்கிறார். கம்யூனிஸ்ட் போராளியாக உணர்ச்சி பொங்கும் நடிப்பு அருமை.
தஷ்மிகா லெக்ஷ்மண்: சிறு வயது குயிலியாக கண்களால் உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
புதுப்பேட்டை சுரேஷ்: வில்லனாக சாராய ஆலை உரிமையாளராக மிரட்டுகிறார்.
ம...