பூக்கி – சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பூக்கி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இளைஞர்களை கவரும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜய் திஷான் நாயகனாகவும், அஸ்வரா நாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கியுள்ளார். புதிய நடிகர்கள் மற்றும் புதிய படைப்பாளிகளுக்கு வாய்ப்பு வழங்கும் முயற்சியாக ‘பூக்கி’ உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்தார். கதையும் திரைக்கதையும் தான் இப்படத்தின் முக்கிய பலம் என்றும், கன்டென்ட் அடிப்படையிலான படங்களை தொடர்ந்து தயாரிப்பதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். ‘பூக்கி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு தெரிவித்தது. ‘பூக்கி’ குறித்து விஜய் ஆண்டனி பேச்சு ‘பூக்கி’ படம் ஒரு எளிமையான ஆனால் வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம். புதிய சிந்தனைகளுடன் வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் எனக்கு பிடித்த விஷயம். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குநர் கணேஷ் சந்திராவை ஒளிப்பதிவாளராக ...