யோலோ – திரைப்பட விமர்சனம்
காதல் படமாகத் துவங்கி, பேய் படமாக மாறி, இறுதியில் எமோஷ்னல் ட்ராமாவாக முடியும்தான் யோலோவின் சிறப்பு. கதையின் மையக் கேள்வி: ஹீரோ தேவ் – ஹீரோயின் தேவிகா. இருவருக்கும் தெரியாமலே திருமணம் நடந்துவிட்டதாகக் கதை சொல்லப்படுகிறது. அப்படியென்றால், அவர்கள் வாழும் இந்த வாழ்க்கை யாருடையது? உண்மையில் என்ன நடந்தது? — இந்த சஸ்பென்ஸை நோக்கி கதை நகர்கிறது. நடிப்பு: ஹீரோ தேவ், யூட்யூபில் ப்ராங்க் வீடியோ எடுத்து வாழும் கேரக்டராக வருகிறார். இயல்பான நடிப்பு. ஹீரோயின் தேவிகா, எமோஜி வெப்சீரிஸ் மூலம் பிரபலமானவர். இப்படத்திலும் கவர்ச்சியோடு, உணர்ச்சியோடும் நடித்துள்ளார். மற்றொரு நாயகியும் தனது வேலையை சரியாக செய்துள்ளார். வில்லன்களாக வரும் கதாபாத்திரங்கள் சற்றே பழைய ஸ்டைல்; அதில் புதுமை குறைவு. தொழில்நுட்பம்: ஒளிப்பதிவாளர் தான் உண்மையான ஹீரோ. ஒவ்வொரு ஃப்ரேமிங்கும் அழகாக அமைந்துள்ளது. DI வேலை மெருகூட்டப்பட்டுள்ளது. படம் ஒரு விஷுவல் ட்ரீட் . இசையமைப்பாளர் பின்னணி இசையில் சரியான அளவு கொடுத்துள்ளார். பாடல்கள் சுமாராகவே இருக்கின்றன. ப்ளஸ்: ஹீரோ–ஹீரோயினின் கெமிஸ்ட்ரி நல்லா வேலை செய்துள்ள...