Posts

Showing posts with the label Rudhra

ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Image
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நடிகர் விஷ்ணு விஷால், " விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி க...