தமிழ்செல்வி மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா?
விஜய் டிவியின் முன்னணி நெடுந்தொடரான சின்ன மருமகள், தமிழ்செல்வியின் உறுதியான பயணத்தால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. தற்போது, மருத்துவராகும் கனவை நிறைவேற்ற 1 லட்சம் ரூபாய் திரட்ட, தமிழ்செல்வி மொய் விருந்து நடத்தத் திட்டமிடுகிறார். ஆனால், சாவித்திரியின் கிடா விருந்து இதற்கு சவாலாக உள்ளது. இந்த பரபரப்பான திருப்பத்தில், தமிழ்செல்வி தன் கனவை நோக்கி வெற்றி பெறுவாரா? சாவித்திரியின் திட்டத்தை முறியடித்து, தேவையான தொகையை திரட்டுவாரா? இந்த உச்சகட்ட கட்டத்தில், தமிழ்செல்வியின் போராட்டம் ஒவ்வொரு குடும்பத்தின் உணர்வையும் பிரதிபலிக்கிறது.
தமிழக மக்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக தமிழ்செல்வியை பார்க்கும் இந்த நேரத்தில், அவரது கனவு வெல்லுமா என்பதை அறிய, சின்ன மருமகள் தொடரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியிலும், Disney+ Jio Hotstar OTT தளத்திலும் கண்டு ரசியுங்கள்!