Posts

Showing posts with the label Sam CS

நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ் !

Image
இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் - சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) - சுழல் - 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) - சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, இந்த சீரிஸ் தனது தரமான படைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சாம் சி எஸ் இசையில் பின்னணி இசைக்கு எப்போதுமே தனி அடையாளம் உண்டு. ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம், வலி அல்லது உற்சாகத்தை வெறும் இசையின் மூலம் பார்வையாளர்களிடம் க...

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார்

Image
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார். திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், #RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் க...

மஹாவதார் நரசிம்மா: திரை விமர்சனம்

Image
  கதைக்களம் : புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், அசுரர்களான ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யாக்ஷன் சகோதரர்களின் கொடுங்கோல் ஆட்சியை மையமாகக் கொண்டது. விஷ்ணு பக்தர்களை துன்புறுத்தி, விஷ்ணுவை அழிக்க சபதமெடுக்கும் ஹிரண்யாக்ஷன், பூமாதேவியை கடலுக்கு அடியில் சிறை வைக்கிறார். விஷ்ணுவின் வராக அவதாரம் அவரை வீழ்த்தி பூமியை மீட்கிறது. தம்பியின் மரணத்திற்கு பழிவாங்க, ஹிரண்யகசிபு பிரம்மனிடம் தவம் செய்து, எந்த மனிதனாலோ, உயிரினத்தாலோ, ஆயுதத்தாலோ தன்னைக் கொல்ல முடியாத வரத்தைப் பெறுகிறார். மூவுலகையும் ஆளும் அவர், தன் மகன் பிரகலாதனின் விஷ்ணு பக்தியால் சீற்றமடைகிறார். பிரகலாதனின் அசைக்க முடியாத பக்தியும், ஹிரண்யகசிபுவின் ஆட்சிக்கு முடிவு கட்டிய விதமும் மீதிக்கதை. நடிப்பு/கதாபாத்திரங்கள் : பிரகலாதன் : அனிமேஷன் கதாபாத்திரமாக இருந்தாலும், அவரது பக்தி மற்றும் அப்பாவித்தனம் மனதைத் தொடுகிறது. ஹிரண்யகசிபு : அசுரத்தன்மையும், தந்தையாக உள்ள உணர்ச்சிகளும் சமநிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. விஷ்ணு (நரசிம்மர்) : கிளைமேக்ஸில் அவரது தோற்றம் மிரட்டலாக உள்ளது. தொழில்நுட்ப அம்சங்கள் :        ...