இரவின் விழிகள் - திரைவிமர்சனம்
சமூக ஊடகங்களை சுயநலத்திற்காக பயன்படுத்தும் மனிதர்களுக்கு டார்க் உலகை காட்டி எச்சரிக்கிறது இரவின் விழிகள் யூட்யூப் சேனலின் வீவ்ஸுக்காகவும், காசுக்காகவும் கண்டதையும் வீடியோ எடுத்து கன்டென்ட் ஆக்குகிறார்கள் ஹீரோ மகேந்திராவும், ஹீரோயின் நீமாரேயும். இன்னொரு புறம் இப்படியான ஆட்களை கடத்தி வைத்து கொடுமை செய்கிறார் வில்லன் சிக்கல் ராஜேஷ். படத்தின் இயக்குநரும் அவரே! ஒரு கட்டத்தில் அவர் ஹீரோ ஹீரோயினையும் கடத்துகிறார். அதற்காக அவர் சொல்லும் காரணமே படத்தின் மொத்தக்கதையும் ஹீரோ மகேந்திரா தான் படத்தின் தயாரிப்பாளரும் என்பதால் நிறைய காட்சிகளில் அதிக லிபர்டி எடுத்துக்கொண்டார் போல. நிச்சயமாக அவர் இன்னும் நடிப்பில் நிறைய உழைப்பைப் போட வேண்டும். நாயகி நீமா ரே ஒகே ரகம். வில்லனாக வரும் சிக்கல் ராஜேஷ் கூடுமான வரை நல்ல நடிப்பை கொடுக்க முயற்சித்துள்ளார். நிழல்கள் ரவி, மாரிமுத்து உள்பட இன்னும் சில கேரக்டர்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பாஸ்கர் கூடுமான வரை தனது கேமராவால் படத்தின் தரத்தைக் கூட்ட போராடியுள்ளார். இன்னும் ட்ரெண்டியாக ஷாட்ஸை கம்போஸ் செய்திருக்கலாம். பின்னணி இசையிலும் பாடல்களில...