கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. ‘ROOT’ படத்தின் முதல் பார்வை மற்றும் சில முக்கிய காட்சிகள் தலைவருக்கு நேரில் காண்பிக்கப்பட்டது. காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டினார். மேலும், இப்படம் சிறப்பான வெற்றியை பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த சந்திப்பு படக்குழுவினருக்கு மேலும் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சூரியபிரதாப் S சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் துணை இயக்குநராக . தற்போது ‘ROOT – Running Out of Time’ படத்தின் மூலம் தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார். ‘ROOT – Running Out of Time’ படத்தை சூரியபிரதாப் S எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனா...