Posts

Showing posts with the label Actress Madhoo Bala

எதையும் கேட்காமல் ‘கண்ணப்பா’ படத்தில் நடித்தது சரி என்று படம் உணர்த்தியது - நடிகை மதுபாலா மகிழ்ச்சி பேச்சு

Image
  நடிகை மதுபாலா பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், நிறைய விசயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்து, எதுவும் சொல்ல முடியாமல் போகும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருக்கிறேன். இந்த படம் பண்ணுவதற்கு என்னை சிவன் தான் தேர்வு செய்தார், என்று விஷ்ணு சார் நேர்காணலில் சொன்னார். அதுபோல தான் நானும். சிறு வயதில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். யார் படத்தில் நடிக்க வேண்டும், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல், எதுவுமே தெரியாம நடிக்க வந்தவள் நான். நடிகையாக எப்படி அறிமுகமாக வேண்டும் என்றால், பெரிய பெரிய இயக்குநர்கள் பெயரை சொல்வார்கள், ஆனால் நான் அப்படி எல்லாம் சொல்லாமல், எதாவது ஒரு படம், இயக்குநர் யாராக இருந்தாலும் பரவாயில்லை என் முகம் திரையில் வர வேண்டும், என்ற எண்ணத்தில் மட்டுமே நடிக்க வந்தேன். அது ஏ கிரேட் படமா, பி கிரேட் படமா, நல்ல படமா, கெட்ட படமா என்று எதையும் கேட்காமல் நடிக்க வந்தவள் தான் நான். அதுபோல தான் இந்த படத்தின் வாய்ப்பும் அமைந்தது. இந்த படத்திற்காக எனக்கு கால் வந்தபோது உடனே எஸ் சொல்லிவிட்டேன். என்ன கதாபாத்திரம், என்ன கதை என்று எதையும் கேட்கவில்லை, உடனே சம்ம...