சக்தி திருமகன் – திரை விமர்சனம்
ஒரு கதாநாயகனின் கேரக்டரில் சிறிய புதுமை இருந்தாலே அந்தப்படம் வேறுபடுகிறது. இயக்குநர் அருண்பிரபு எழுதிய சக்தி திருமகன் அதற்குச் சிறந்த உதாரணம். தலைமைச் செயலகத்தில் தரகு வேலை செய்பவராக விஜய் ஆண்டனி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சினிமாவில் அடிக்கடி வராத பின்னணி என்பதால் ஆர்வம் உண்டாகிறது. அதிகாரிகளின் நகர்வுகள், அரசியல் அசைவுகள் அனைத்தையும் உள்ளங்கையில் வைத்தவர் போலக் காட்சியளிக்கும் இந்த கேரக்டர், ஹீரோவின் தனித்தன்மையை உறுதி செய்கிறது. விஜய் ஆண்டனி நடித்த விதம் குறிப்பிடத்தக்கது. உடல்மொழி, உரையாடல் மாடுலேசன், கேரக்டருக்கான தீவிரம் ஆகிய அனைத்தும் சிறப்பாக பொருந்தியுள்ளன. சாதாரண ஹீரோ கேரக்டரிலிருந்து விலகி, அதிகாரம், அரசியல், தரகு வேலை ஆகிய சாயல்களை அவர் சுமூகமாகக் கலந்துள்ளார். வாகை சந்திரசேகர் போன்ற மூத்த நடிகர்களின் நடிப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது. காதல் ஓவியம் புகழ் கண்ணனும் பவர்ஃபுல் வில்லன் கேரக்டரில் வலிமையான நடிப்பைக் கொடுத்துள்ளார். தொழில்நுட்ப தரப்பில், ஒளிப்பதிவாளர் தொடர்ந்து நல்ல தரத்தைத் தக்கவைத்துள்ளார். குறிப்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளில் கலரிங், ஷாட் கம்போசிஷன் பார...