Posts

Showing posts with the label VV entertainments

சென்னை ஏரோஹப் மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் வி.வி. எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Image
‘ஃப்யூச்சர் ஐகான் விருதுகள்’, ‘பிசினஸ் ஐகான் விருதுகள்’, ‘சோஷியல் விருதுகள்’, ‘வுமன் விருதுகள்’ மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான விருதுகள் என 200-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த நவீன் அவர்களுக்கு ‘வீர தமிழன்’ விருது வழங்கப்பட்டது. மேலும், நவீன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக நடிகர் விஜய் விஷ்வாவின் ஜே.எஃப்.சி. டிரஸ்ட் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதிய நிறுவனமான பி.ஒய். ஒல்லிவ் மற்றும் மைண்ட் கஃபே ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன, மேலும் மதிய உணவு வழங்கப்பட்டது. விழாவில் சென்னை மேயர், பிக் பாஸ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், நடிகர்கள் மைம் கோபி உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள், பல நாடுகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.