Posts

Showing posts with the label New Movie Poojai

NBK 111 பிரமாண்டமாக தொடக்கம்!பாலகிருஷ்ணா – கோபிசந்த் மலினேனி வரலாற்று எபிக் படத்திற்கு மாபெரும் பூஜை!

Image
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுக்குப் பிறகு, இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் மறுபடியும் இணைந்து வரலாற்றைத் துலுக்கும் #NBK111 என்ற பிரம்மாண்ட எபிக் படத்தை தொடங்கி வைத்துள்ளார். வெங்கட சதீஷ் கிலாரு (Viruthi Cinemas) மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்யம் படங்களுக்குப் பிறகு, இது இவர்களின் நான்காவது கூட்டணி. ஹைதராபாத்தில் நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவுடன் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. AP அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை வழங்க, இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு இணைந்து இயக்கினர். படத்தின் சிறப்பு போஸ்டரில் நீண்ட முடியும் பூரண தாடியும் கொண்ட அரச கம்பீரத்தில், வாள் மற்றும் நங்கூரத்துடன் பாலகிருஷ்ணா புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறார். வரலாற்று பி...

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

Image
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக  இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில்,  காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது.  காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது.  மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ்  திரையுலகில் கால்பதித்துள்ளனர். தயாரிப்பாளர் விநாயகா அஜித் இப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.  இப்படத்தில் கதாநாயகனாக விமல் மற்றும் கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, 'விடுதலை' சேத்தன், 'பருத்திவீரன்' சரவணன் உட்பட மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து, நடித்து வருகிறார்கள். சிறியவர் முத...