டூரிஸ்ட் ஃபேமிலி பட விமர்சனம் - ஒரு பார்வை
கதை சுருக்கம்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையைச் சேர்ந்த சசிகுமாரின் வறுமையான குடும்பம், ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தமிழ்நாட்டுக்கு தப்பி வருகிறது. ஆனால், ஆரம்பத்திலேயே காவல்துறையிடம் சிக்கிக் கொள்கின்றனர். அவர்களின் இயல்பைப் பார்த்து மனம் இறங்கிய காவல் அதிகாரி அவர்களை விடுவிக்க, சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புது வாழ்க்கையைத் தொடங்க முயல்கின்றனர். ஆனால், ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணை அவர்களை மீண்டும் சிக்கலில் இழுக்கிறது. இந்த சம்பவத்துடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதே படத்தின் மையக் கதை. படத்தின் தரம்: ‘அயோத்தி’ படத்தைத் தொடர்ந்து, மனிதநேயத்தை மையப்படுத்திய மற்றொரு கதையை தேர்ந்தெடுத்து நடித்த சசிகுமார், தனது இயல்பான நடிப்பால் பாராட்டுகளை அள்ளுகிறார். சிம்ரன், வில்லி மற்றும் கேமியோ வேடங்களைத் தாண்டி, இப்படத்தில் தரமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். குறிப்பாக, அவர்களின் மகன்களாக நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கமலேஷின் “ஜோசப் குருவிலா” கதாபாத்திர...