Posts

Showing posts with the label Thalaivan Thalaivi

தலைவன் தலைவி திரைவிமர்சனம்

Image
  கதைக்களம் : ஆகாசவீரன் (விஜய் சேதுபதி) தனது குடும்பத்துடன் ஹோட்டல் ராகவார்த்தினி என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பேரரசி (நித்யா மேனன்) உடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் காதலிக்கத் தொடங்கும்போது, ஆகாசவீரனின் குடும்பம்—தந்தை (சரவணன்), தம்பி மற்றும் அவரே ரவுடிகள் என்பது தெரிய வருகிறது. இதனால் நித்யாவின் குடும்பம் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறது. ஆனால், நித்யா தன் குடும்பத்தை எதிர்த்து ஆகாசவீரனை திருமணம் செய்கிறார். திருமணத்திற்குப் பின், ஆகாசவீரனின் தந்தை நித்யாவை ஹோட்டல் கல்லாப் பெட்டியை பார்க்கச் சொல்ல, இதுவரை அதை கவனித்து வந்த ஆகாசவீரனின் அம்மாவுக்கு (தீபா) ஈகோ பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், ஹோட்டலின் பெயர் நித்யாவின் பெயருக்கு மாற்றப்படுவதால், ஆகாசவீரனின் தங்கைக்கும் கோபம் வருகிறது. இதனால், அம்மாவும் தங்கையும் சேர்ந்து நித்யாவை வேலைக்காரி போல் நடத்த, இதைப் பார்க்கும் நித்யாவின் அம்மா ஆத்திரமடைகிறார். இதனால் ஆகாசவீரன்-பேரரசி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாலும், சண்டைகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் ஆகாசவீரனுக்கு வேறு திர...