Posts

Showing posts with the label GV Prakash

இம்மோர்ட்டல் - திரைவிமர்சனம்

Image
1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிவாசி தம்பதியர்க்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை மனிதப்பிறவியே இல்லை என்று தெரிந்த அந்த ஆதிவாசி தகப்பன் குழந்தையை வீசிவிடுகிறார். இப்போது கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. பிரிண்டிங் பிரஸில் வேலை செய்யும் ஜிவி பிரகாஷை பேரழகியான கயாடுலோஹர் ரூம் ஷேரிங் செய்ய அழைக்கிறார். அது ரூம் அல்ல. மாளிகை! அங்கு ஜிவி பிரகாஷுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் கயாடு லோஹர் அமானுஷ்ய பெண் என்பதை அறிகிறார். அதன்பின் அவர் கயாடுலோஹரின் பிடியில் இருந்து தப்பினாரா…கயாடுலோஹர் யார்? என்பது தான் கதை ஜிவி பிரகாஷ் ஈசியாக ஸ்கோர் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். பேச்சுலர், நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களைப் போல நடிகராக தனித்து ஸ்கோர் செய்துள்ளார் ஜிவி! கயாடு லோஹரை இந்தப்படம் போல் வேறு எந்தப்படத்திலும் யாரும் இவ்வளவு அழகாக காட்டவில்லை. பேரழகை அள்ளி வந்திருக்கிறார் லோஹர். இப்படியொரு ராட்சசியிடம் மாட்டிக்கொண்டால் தான் என்ன? என்பது போன்ற அவரின் லுக் வேறலெவல். மாறன் ஆதித்யா கதிர் ஒகே மார்க் வாங்குகிறார்கள். கார்த்திக் சீனிவாசன் அட்டகாசமாக நடித்துள்ளார...

ப்ளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

Image
இயக்குநர் மாறன், குழந்தைக் கடத்தல் என்பதை மையமாக வைத்து, அதனுடன் எமோஷ்னல் ட்ராமா + திரில்லர் கலந்த கதை ஒன்றை உருவாக்கியுள்ளார். கதை: ஜிவி பிரகாஷ் ஒரு கொரியர் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார். அவருக்கு தெரியாமலே ஒரு பார்சலில் குகைன் இருக்கும். ஆனால் அவர் ஓட்டும் வண்டி மாயமாகிறது. இதனால் ஓனர், ஜிவியின் காதலியை கடத்தி வைத்து, வண்டியும் சரக்கும் திருப்பிக் கொண்டு வரும்படி மிரட்டுகிறார். இந்த சூழலில், தொழிலதிபர் ஸ்ரீகாந்தின் மகளைக் கடத்தினால் பணம் தருவதாக ஜிவிக்கு ஒரு ஆஃபர் கிடைக்கிறது. நண்பர் ரமேஷ் திலக்கோடு அவர் அந்த குழந்தையைக் கடத்தச் செல்கிறார். அவர் உண்மையில் குழந்தையை கடத்தினாரா? இந்த ஆஃபர் யாரிடமிருந்து வந்தது? — இதுதான் படத்தின் சஸ்பென்ஸ். அதோடு சில கிளைக் கதைகளும் இணைந்து கதையை நகர்த்துகின்றன. நடிப்பு: ஜிவி பிரகாஷ், சில எமோஷ்னல் காட்சிகளில் சற்றே பிளாட் ஆனாலும், மொத்தத்தில் சுமாரான நடிப்பைத் தந்துள்ளார். ஸ்ரீகாந்தின் கேரக்டர் ஸ்ட்ராங்காக எழுதப்பட்டிருக்கிறது; அவர் மிகச்சரியாக நடித்துள்ளார். ரமேஷ் திலக் வழக்கம்போல் லைட்டான நகைச்சுவையுடன் தன் பங்கைக் கொடுத்துள்ளார...

‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழா: மாவீரன் காடுவெட்டி குருவின் வாழ்க்கையை கொண்டாடும் திரைப்படம்

Image
  வி.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வ. கெளதமன் இயக்கி நடித்த ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மாவீரன் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள இப்படம், அவரது வீரத்தையும் அறத்தையும் பறைசாற்றுவதாக இயக்குநர் வ. கெளதமன் அறிவித்தார். ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்களையும், சாம் சி.எஸ். பின்னணி இசையையும் வழங்கியுள்ள இப்படத்தில், சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள்: தயாரிப்பாளர்களின் வரவேற்பு : எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி விருந்தினரை வரவேற்றனர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நடிகர் இளவரசு : “காடுவெட்டி குருவின் கதையை உணர்வுப்பூர்வமாக இயக்குநர் கெளதமன் உருவாக்கியுள்ளார். 25 ஆண்டு பழக்கமுள்ள அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி,” என்றார். இயக்குநர் வி. சேகர் : “ஒற்றுமையை வலியுறுத்தும் இப்படம், கூட்டு முயற்சியின் வெற்றி. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றி பெறும்,...