LSS திரை விமர்சனம்
காதலர் தினத்தைக் கடந்து வந்த LSS காவியம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்! கல்லூரி மாணவரான ஆதவ் கிருஷ்ணா படிப்பில் கெட்டிக்காரன். அவரின் நல்ல குணங்களை பார்த்து சிம்ரனுக்கு காதல் மலர்கிறது. பூத்த காதல் விரைவில் தீவிரமாகி இருவரும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இந்நிலையில், தனது கணவரை விட்டு தனியாக வாழும் அம்மாவை பார்க்க ஹீரோவுடன் ஹீரோயின் செல்கிறார். ஆனால் அங்கு சென்று ஹீரோயின் திடீரென காணாமல் போகிறார். அவளை தேடி ஹீரோ அலைகிறார். ஹீரோயின் எங்கு சென்றார்? அவர் காணாமல் போனதற்குப் பின்னால் என்ன மர்மம்? என்பதே படத்தின் மீதிக்கதை. அறிமுக நாயகன் ஆதவ் கிருஷ்ணா இன்னும் கொஞ்சம் வலுவான நடிப்பை வழங்கியிருக்கலாம். சில காட்சிகளில் மட்டும் நல்ல முயற்சி தெரிகிறது. சிம்ரன் ஓரளவு நன்றாக நடித்துப் கவனிக்க வைக்கிறார். ஹீரோவின் அம்மாவாக வரும் வினோதினி வழக்கம்போல் தனது இருப்பை உறுதியாக பதிவு செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்துள்ளனர். இசை ஓரளவு பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் அழுத்தம் தேவைப்பட்டது. காசியில் நடக்கும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் இயல்பாக ப...