Posts

Showing posts with the label Swasika

மாமன் திரைப்படம் OTT ரீலீஸ் தேதி அறிவிப்பு

Image
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘மாமன்’ ஆகஸ்ட் 8, 2025 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியராக வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதை மற்றும் அற்புதமான நடிப்பு என பார்வையாளர்களைக் கவர்ந்த இந்தத் திரைப்படம், டிஜிட்டல் ப்ரீமியர் மூலம், உலகம் முழுக்க உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் தமிழ் ஸ்ட்ரீமிங்கில் கிடைக்கும். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள 'மாமன்' திரைப்படம், மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் நடிகர் ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக அனைத்து வயதினரையும் ஈர்க்கும் என்பது உறுதி. ZEE5 இன் தமிழ் மற்றும் மலையாள வணிகத் தலைவரும், தென்னக மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவருமான லாயிட் C சேவியர் கூறியதாவது… ,  "எங்கள் ZEE5 சந்தாதாரர்களுக்கு 'மாமன்' திரைப்படத்தைப் பிரத்தியேக...

மாமன் திரைப்பட விமர்சனம்

Image
  சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய மாமன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது? வாங்க, பார்க்கலாம்! கதை என்ன? சூரியின் அக்கா ஸ்வாசிகாவுக்கு 10 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு முதல் முறையாக ஆண் குழந்தை பிறக்கிறது. இதனால் சந்தோஷமடையும் சூரி, தனது மருமகனை அளவுக்கு அதிகமாக பாசத்தோடு பார்த்துக்கொள்கிறார். காலையில் குளிப்பாட்டுவது முதல் இரவு தூங்க வைப்பது வரை, பெற்றோர்கள் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் சூரியே செய்கிறார். இதனால், அந்தக் குழந்தை மாமனை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிய மாட்டேன் என்று இருக்கிறது. இந்த நிலையில், சூரிக்கு ஐஸ்வர்யா லட்சுமியுடன் திருமணம் நடக்கிறது. ஆனால், திருமணத்துக்குப் பிறகும் குழந்தை சூரியை விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. முதலில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஐஸ்வர்யா, பின்னர் இதனால் வருத்தப்படத் தொடங்குகிறார். இதனால் சூரிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பெரிய பிரச்சனை உருவாகி, குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இந்த உறவுகள் மீண்டும் இணைந்தனவா? அதுதான் படத்தின் மீதிக்கதை. படம் எப்படி இர...