Posts

Showing posts with the label Netflix

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!

Image
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில் *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது.., “நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புக...

செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 இன் தொடக்க விழாவில் ‘ஆபரேஷன் சஃபேத் சாகர்’ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டது!

Image
இந்திய விமானப்படையின் துணிச்சலையும் பாரம்பரியத்தையும் கௌரவிக்கும் வகையில், கார்கில் போரின் போது நடத்தப்பட்ட உலகின் மிக உயரமான விமான நடவடிக்கையின் (Air operation) கதையைச் சொல்கிறது நெட்ஃபிலிக்ஸின் இந்தத் தொடர். புது தில்லி, நவம்பர் 2, 2025: கார்கில் போரில் இந்திய விமானப்படையின் முக்கிய பங்கை எடுத்து சொல்லும் வகையில் நெட்ஃபிலிக்ஸில் வரவிருக்கும் தொடரான ’ஆபரேஷன் சஃபேத் சாகர்’ இருக்கிறது. புது தில்லியில் முதன்முதலில் நடைபெற்ற செகோன் இந்திய விமானப்படை மராத்தான் 2025 (SIM-25) இல் வெளியிட்டபோது இந்தியாவின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. அபிஜீத் சிங் பர்மர் மற்றும் குஷால் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் உருவாக்கப்பட்டு ஓனி சென் இயக்கியுள்ள இந்தத் தொடரில் சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, மிஹிர் அஹுஜா, தாருக் ரெய்னா மற்றும் அர்னவ் பாசின் உள்ளிட்ட பலர் பணியாற்றியுள்ளனர்.  புது தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பணியாற்றும் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல்- ஏ.பி. சிங் உள்ளிட்ட பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஆயிரக்க...