படையாண்ட மாவீரா- விமர்சனம்
காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் வ.கெளதமன். அவர் மட்டுமல்ல, இப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காடுவெட்டி குரு, 1988-ல் திமுகவில் அரசியல் பயணம் தொடங்கியவர். பின்னர் வன்னியர் சங்கம் வழியாக பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார். வன்னியர் சமூகத்துக்காக பெரிதும் களமாடிய போராளி என்ற பெயர் பெற்றார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்டு, இறுதிக்காலத்தில் பெரும் கஷ்டத்தைச் சந்தித்தார். இதையெல்லாம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தில், அரசியல் வரலாற்றோடு சேர்த்து சில கமர்சியல் அம்சங்களையும் — குறிப்பாக போலீசாரை வில்லன்களாகச் சித்தரித்திருப்பது — சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி குருவையும் அவரது குடும்பத்தையும் விட்டுவிட்டது போன்ற விஷயங்களைத் தெளிவாகச் சொல்லாமல் இயக்குநர் தவிர்த்திருப்பது கவனிக்கத்தக்கது. நடிப்புப் பக்கம்: வ.கெளதமன் தனது முயற்சியில் ஈடுபாட்டைக் காட்டியுள்ளார். அவரது மகன் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்த புஜிதா பொன்னடாவுக்கு அதிக முக்கியத்...