Posts

Showing posts with the label Vetri

‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்

Image
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம்  ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இது படக்குழுவினருக்கு மிக முக்கிய தருணமாக மாறியிருக்கிறது.  படத்தின் நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களை நேரில் சந்தித்து, படத்தின் முதல் பார்வை போஸ்டரையும், படத்திலிருந்து சில காட்சிகளையும் அவருக்கு காண்பித்தனர். காட்சிகளை பார்த்து படக்குழுவின் உழைப்பை பாராட்டினார். மேலும், இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு படத்திற்கு ஆதரவு தெரிவித்த வெற்றிமாறனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ‘லட்சுமிகாந்தன் கொலை வாழ்க்கு’ திரைப்படத்தை, சமூக கதைகள் உருவாக்குவதில் தீர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தை 2 எம் சினிமாஸ் சார்பில் K.V. சபரீஷ் தயாரிக்க, டி பிக்சர்ஸ் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பா...

சென்னை ஃபைல்ஸ்: முதல் பக்கம் திரைப்பட விமர்சனம்

Image
  சென்னை ஃபைல்ஸ் : முதல் பக்கம் ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக, புதுமையான கதைக்களத்துடன் ஆரம்பிக்கிறது, ஆனால் அதன் நான்-லீனியர் கதைசொல்லல் மற்றும் தொடர்பற்ற காமெடி காட்சிகளால் தடம்புரள்கிறது. மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில், அனிஷ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகிய இப்படம், வெற்றியின் திறமையை மையப்படுத்தி, சென்னையை பின்னணியாகக் கொண்ட ஒரு புலனாய்வு கதையை முன்வைக்கிறது. கதைச் சுருக்கம்: பிரபல க்ரைம் நாவலாசிரியரின் மகனான பிரபு (வெற்றி), தனது தந்தையின் வாழ்க்கை மற்றும் படைப்புகளைப் பற்றி எழுத சென்னை வருகிறார். அங்கு, மூத்த காவல் ஆய்வாளர் ராமையாவை (தம்பி ராமையா) சந்திக்கும் சூழ்நிலையில், ஒரு தொடர் கொலை வழக்கில் ஈடுபடுகிறார். தனது தந்தையிடமிருந்து பெற்ற புலனாய்வுத் திறனைப் பயன்படுத்தி, பிரபு இந்த மர்மத்தை அவிழ்க்க முயல்கிறார். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள உண்மைகளும், திருப்பங்களுமே படத்தின் மையக் கரு. பலம்: நடிப்பு: வெற்றி தனது இயல்பான நடிப்பால் பிரபு கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மை சேர்க்கிறார். அவரது சவாலான புலனாய்வு கதாபாத்திரம், க்ரைம் த்ரில்லர் வகைமைக்கு ஏற்றவாறு அமைகிறது. தம்பி ராமையா, நகை...

ராஜபுத்திரன் திரைவிமர்சனம்

Image
மகா கந்தன் இயக்கத்தில், பிரபு, வெற்றி, கிருஷ்ணபிரியா, கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிப்பில், ராமநாதபுரம் மாவட்டத்தின் 1990களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘ராஜபுத்திரன்’, அப்பா-மகன் பாசத்தை மையமாகக் கொண்ட ஒரு கமர்ஷியல் திரைப்படமாகும். இது ஒரு பக்கா கிராமத்து ஆக்ஷன்-டிராமா, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைச் சுற்றி நகர்கிறது. கதைச் சுருக்கம்: செல்லையா (பிரபு), விவசாயத்தை புனிதமாகக் கருதும் 60 வயது விவசாயி, தன் மகன் பட்டமுத்து (வெற்றி) பிறருக்கு வேலை செய்வதை எதிர்க்கிறார். ஆனால், வறுமையால் தவிக்கும் குடும்பத்திற்காக, பட்டமுத்து ரகசியமாக லிங்கா (கோமல் குமார்) என்பவரிடம் வேலைக்குச் சேர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் (ஹுண்டி) ஈடுபடுகிறார். இதனால் சிக்கலில் மாட்டிக் கொள்ள, அவரை காப்பாற்ற செல்லையா முன்வருகிறார். பட்டமுத்துவின் வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறியதா, அவனது காதல் பூச்செண்டு (கிருஷ்ணபிரியா) உடனான காதல் கல்யாணத்தில் முடிந்ததா, மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஆகியவை கதையின் மையம். பலங்கள்: பிரபுவின் நடிப்பு : பிரபு, செல்லையாவாக தன் பண்பட்ட நடிப்பால் படத்தை தாங...