பிளாஸ்ட் - திரை விமர்சனம்
கராத்தே மாஸ்டரானா அர்ஜுன் தன் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கு சிறு வயதிலே கராத்தே சொல்லித்தருகிறார். மேலும் நம் எதிரில் யார் பாதிக்கப்பட்டாலும் தட்டிக்கேட்கணும் என்று அறிவுறுத்தவும் செய்கிறார். அதை வேதவாக்காக எடுத்து வளரும் ப்ரீத்தி தவறு யார் செய்தாலும் போட்டுப்பொளக்கிறார். அம்மாவான அபிராமிக்கு இதில் உடன்பாடில்லை. இவர்கள் பேமிலி ட்ராவல் இப்படிச்செல்ல, இன்னொரு பக்கம் 7000 கோடி ரூபாய் லாபத்திற்காக ஒரு மலைக்கிராமத்தையே சூறையாடும் வேலையில் இறங்குகிறார் வில்லன். அந்த வில்லன் டீமிலுள்ள ஒருவருக்கும், அர்ஜுன் மகளுக்கும் ஒரு பஞ்சாயத்து வருகிறது. அது அப்படியே தொட்டுத்தொட்டு பெரிதாக வளர, முடிவில் அர்ஜுன் பேமிலி எடுத்த ஆக்சன் அவதாரம் என்னவானது? என்பதாக படத்தின் திரைக்கதை தடதடக்கிறது அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி மூவரும் நடிப்பதை விட, அடிப்பதை தான் அடிப்படையாகச் செய்துள்ளனர். மூவரும் ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளனர். ப்ரீத்தி முகந்தன் போட்டுள்ள எபெக்ட் அட சொல்ல வைக்கிறது. 40 வயதை கடந்த அபிராமி காட்டியுள்ள ஆக்சன்லாம் வேறரகம். இந்தப்பேமிலியில் ஒருவராக வரும் விவேக் பிரசன்னாவும் மி...