ஏகனின் “ஹைக்கூ” – படப்பிடிப்பு துவக்கம்
‘ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான முயற்சியாக உருவாகும் நடிகர் ஏகன் நடிப்பிலான “ஹைக்கூ” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சிறப்பாக துவங்கியுள்ளது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கதையின் மையமாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், கதாநாயகனாக ஏகன் நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ போன்ற படங்களில் கவனம் பெற்ற நடிகை பெமினா ஜார்ஜ் மற்றும் ‘கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முக்கியமான கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இரு நடிகைகளுக்கும் கதையை முன்னெடுக்கும் வகையில் ஆழமான, உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெண் கதாபாத்திரங்களின் உணர்வுகள், வாழ்க்கை பார்வை மற்றும் சமூகச் சூழலை நுணுக்கமாக வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, ‘ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன்ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். இதன் மூலம் நடிகைகளின் கதாபாத்திரங்கள் மேலும் வலுவாக உருவெ...