கும்கி 2 திராவிமர்சனம்
இசை: நிவாஸ் கே. பிரசன்னா அமைத்திருக்கும் பாடல்கள் காட்சிகளுடன் இயற்கையாக கலக்கின்றன. ஒவ்வொரு பாடலும் படத்தின் உணர்வுகளுக்கும் சூழலுக்கும் சரியாகப் பொருந்தியிருக்கிறது. பின்னணி இசை உணர்ச்சிகளை நன்றாக உயர்த்துகிறது. கதை: மலைப் பிரதேசத்தில் வாழும் மதி சிறுவயது முதலே பாசத்திற்காக ஏங்கும் ஒருவர். மதியின் தாய் (மைய்னா புகழ் சூசன்) சாராயம் விற்பவராக இருப்பதால், மகனிடம் அக்கறை காட்டுவதில்லை. பள்ளியிலும் "சாராயம் விற்பவரின் மகன்" என்ற குற்றம்சாட்டி யாரும் மதியிடம் நெருங்கமாட்டார்கள். மனஉளைச்சலில் இருந்தபோது, ஆசிரியர் ஒருவர் இயற்கையின் அமைதியை உணரும்படி அறிவுறுத்துகிறார். அதே நேரத்தில் பள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை மதி காப்பாற்றுகிறார். அதன்பின் அந்த யானை மதியுடன் பாசத்தால் இணைகிறது. பாசத்திற்காக துடிக்கும் மதிக்கு இந்த யானை சகோதரன் போல் ஆகிறது. ஒருநாள் யானை திடீரென மாயமாகிவிடுகிறது. அதைத் தேடி மதியின் வாழ்க்கை குழம்பிப் போகும் நிலையில், ஆசிரியர் அவரை தொடர்ந்து படிக்கச் செய்கிறார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு திரும்பும் மதிக்கு, யானை மாயமான மர்மம் குறித்து அதிர்ச்சியா...