மாயக்கூத்து - திரைப்பட விமர்சனம்
கதைக்களம் ‘மாயக்கூத்து’ ஒரு புதுமையான ஃபேண்டஸி-திரில்லர் திரைப்படமாக, ஒரு எழுத்தாளரின் கற்பனை உலகமும், நிஜ உலகமும் கலந்து உருவாக்கப்பட்ட கதையை மையமாகக் கொண்டுள்ளது. இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திராவின் இயக்கத்தில், ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தில், நாகராஜன், ஐஸ்வர்யா ரகுபதி, காயத்ரி, டில்லி கணேஷ், மு.ராமசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் வாசன் (நாகராஜன்) மூன்று தொடர்கதைகளை எழுதி வருகிறார்: 50வது கொலையைச் செய்யத் துடிக்கும் ரவுடி தனபால் (சாய்தீனா), நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் தவிக்கும் ஏழை மாணவி ராஜி, மற்றும் பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் வேலைக்காரி (ஐஸ்வர்யா). இவர்களை அழுத்தமான கதாபாத்திரங்களாக உருவாக்கி, கதையில் பல திருப்பங்களை கொண்டு வருகிறார். ஆனால், ஒரு நாள், அவர் கற்பனையில் உருவாக்கிய இந்தக் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று, அவரைத் தேடி வந்து, “எங்களை இப்படி தவிக்கவிடலாமா? கதையை மாற்று!” என்று மிரட்டுகின்றன. வாசன் மறுக்க, கதாபாத்திரங்கள் அவரைத் துரத்துகின்றன. இந்த உண்மை-கற்பனை கலவையில் வாசனின் தவிப்பும், அவர் ...