Posts

Showing posts with the label my lord

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு

Image
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) எனும் திரைப்படம் - பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,   மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.  ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.   சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தால...