Posts

Showing posts with the label Thandora voice kollywood news

எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் அல்லு அர்ஜுன் -அட்லீ -சன் பிக்சர்ஸ்- கூட்டணி!

Image
ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ - சன் பிக்சர்ஸ் ஒன்றிணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இதனால் திரையரங்குகளுக்கு சென்று சினிமாவை கொண்டாடும் இந்திய அளவிலான ரசிகர்களிடத்தில் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மிக பெரிய அளவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது.  இந்திய திரையுலகில் பிரம்மாண்டமான சரித்திர வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வரும் அல்லு அர்ஜுன் - அட்லீ - சன் பிக்சர்ஸ் கூட்டணி #AA22xA6 எனும் திரைப்படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இவர்களின் இணைவு - இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தைப் பற்றிய அப்டேட்டை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.  'ஐகான் ஸ்டார் ' அல்லு அர்ஜுனின் வசீகரிக்கும் திரைத் தோற்றம் - பிரம்மாண்டத்தின் நிரந்தர அடையாளம் சன் பிக்சர்ஸ் - டபுள் ஹாட்ரிக் படைப்பாளி அட்லீ என தனித்துவமான சாதனையாளர...

ஆக்சன் மற்றும்கிரைம் திரில்லர்படமாக வளருகிறது " தி பெட்லர் "

Image
சில்வர் ஸ்கிரீன் டிஜிட்டல் இந்தியா நிறுவனம் சார்பில் காஜா மைதீன் - ஷாகுல் அமீது தயாரிக்கும் படத்தின் பெயர்தான் " தி பெட்லர் ". பிரபு சதீஷ், ஐஸ்வர்யா (அறிமுகம்) ஸ்ரீமன், சோனியா போஸ், கூல் சுரேஷ் இவர்களுடன் மேலும் பலரும் நடிக்கின்றனர். அமீன் ஒளிப்பதிவையும், மதுசூதனன் இசையையும், கார்த்திக் எடிட்டிங்கையும், ராக்கிராஜேஷ் சண்டை பயிற்சியையும், அசோக்ராஜ் நடன பயிற்சியையும், சுப்பு கலையையும் கவனிக்கின்றனர். முன்னனி இயக்குனர்களிடம் டைரக்சன் துறையில் பயிற்சி பெற்ற பிரபுசதீஷ் இதன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து டைரக்ட் செய்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது, " இன்றைய இளைய சமுதாயம் மிக அதிகமாக போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்து வருகிறது. இவர்களுக்கு இந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வருகிறது. யார் மூலம் இளைய சமூகம் இவைகளை பெறுகிறது.  இதனால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் எப்படி பாழாகிறது. இவைகளில் இருந்து இளைய சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது? என்ற கேள்வியை மட்டும் வைத்துக் கொண்டு " தி பெட்லர்" படத்தை ஆக்சன், கிரைம்...

இந்தியளவில் இதுவே முதல் முறை... - ஹிப் ஆப் ஆதி பெருமிதம் *பொருநை* ’ ஆவணப் படம் உருவாக்கம்

Image
இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். 'மூக்குத்தி அம்மன்' இரண்டாம் பாகம் மற்றும் இன்னும் ஒரு படத்திற்கு இசை அமைக்கிறேன்" என்றும் "'ஜோ' படத்தை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதற்கான படப்பிடிப்பு, என்னுடைய இசை உலக சுற்றுப்பயணம் முடியும் தருவாயில் இந்த படத்தை நடித்து முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன். இது தவிர இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். திரை உலகத்துக்கு வருவதற்கு முன்பிருந்தே என் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்பும் ஆதரவும் அளித்து வருகிறார்கள். திரையுலகிற்கு வந்த பிறகு இன்று வரை எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரித்தும் வருகிறார்கள். இசை, நடிப்பு பணி தவிர தயாரிப்பு பணியிலும் நான் ஈடுபட்டதற்கும் ஆதரவளித்தார்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்து கொ...

நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'ஹிட் : தி தேர்ட் கேஸ் ' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Image
*'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் சைலேஷ் கொலானு - வால் போஸ்டர் சினிமா - யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் - கூட்டணியில் உருவான ' ஹிட் : தி தேர்ட் கேஸ் ' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது* Link 👇 https://youtu.be/w71IxWe96wo 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான 'ஹிட் : தி தேர்ட் கேஸ்' படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல.. கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனி, நானியின் சொந்தப் பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.  நானி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான அர்ஜுன் சர்க்...

டெஸ்ட் திரைப்படத்தின் இசைமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் பற்றி...

Image
பிரபல பின்னணி பாடகி சக்திஸ்ரீ கோபாலன், ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரித்து இயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'டெஸ்ட்' வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானதன் மூலம் தனது கலைப் பயணத்தில், எழுச்சியுடன் அடியெடுத்து வைத்தார். ஆர். மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளதுடன், குறிப்பாக அதன் எழுச்சியூட்டும் மற்றும் கதைக்களத்தை விவரிக்கும் விதத்திலான இசைக்கும் பாராட்டை பெற்றுள்ளது. தனது தனித்துவமான குரலுக்காகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இந்திய திரைப்படங்களின் இசைக்கோர்வைகளில் இடம்பெற்றுள்ள தரவரிசையில் முன்னணி வகிக்கும் பாடல்களுக்காகவும் கொண்டாடப்படும் சக்திஸ்ரீ, ஒரு இசையமைப்பாளராக தனது பணிக்கு தனிப்பட்ட பாணியிலான கலைத்திறனையும் உணர்ச்சிபூர்வமான ஆழத்தையும் கொண்டு வந்திருக்கிறார். 'டெஸ்ட்' திரைப்படத்தின் இசைக்கோர்வை ஒலிகளின் துடிப்பான கலவையாகும், இதில் புகழ்பெற்ற 'ராப்பர்' யோகி பி மற்றும் சக்திஸ்ரீ உள்ளிட...

சாணி திரைப்பட துவக்க விழா - பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

Image
                                                           14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் A.P.J.அப்துல்கலாம் இவர்களின் புகைப்படங்களை முன்னணியாக வைத்து மிகுந்த மரியாதையுடன் படத்துவக்கவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நேரில் கலந்துகொண்டனர்.  மேலும், அனைத்து மாணவிகளுக்கும் இனிப்புகள், நோட்டு புத்தகம், பேன...

தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மலையாளத்திலும் கன்னடத்திலும் வெளியாகும் " EMI " மாதத்தவணை

Image
 மலையாளம் மற்றும் கன்னடத்திற்கு செல்லும் " EMI " மாதத்தவணை " சபரி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் 4 ம் தேதி தமிழக திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது " EMI " மாதத் தவணை " படம்.  பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ்

Image
மீண்டும் இணைந்த தனுஷ், அருண் விஜய் கூட்டணி  BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க, இருவர் கூட்டணியில் உருவாகும் “இட்லி கடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழித்தியுள்ளது.  இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு படக்குழு வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.  இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.  நடிகர...