DNA திரைவிமர்சனம்
கதையின் கரு 2014இல் கீழ்க்கட்டளை அரசு மருத்துவமனையில் தொடங்குகிறது. பணிச்சுமையின் காரணமாக மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு மருத்துவர் விபத்தில் சிக்க, ஒரு தம்பதி இறந்து விடுகின்றனர். அவர்களின் புதிதாகப் பிறந்த குழந்தை உயிர் பிழைத்து தனியாக விடப்படுகிறது. பின்னர், 2023இல் கதை ஆனந்தை (அதர்வா முரளி) வைத்து கதை நகர தொடங்குகிறது . காதல் தோல்வியால் மனம் உடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த், தன் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயல்கிறார். அவர் திவ்யாவை (நிமிஷா சஜயன்) மணந்து கொள்கிறார். பின் இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது , திவ்யா வின் அருகே அந்த குழந்தை வைக்கப்படும்போது, அது தனது குழந்தை இல்லை என்று திவ்யா உறுதியாகச் சொல்கிறார். மனநலப் பிரச்சினைகளுடன் போராடும் திவ்யாவின் நிலையில், ஆனந்த் உண்மையைத் தேடி மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கிறார். 139 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் ஆரம்பத்தில் மிகவும் நன்றாக இருக்கிறது. முதல் பாதி உணர்ச்சிகரமாகவும் மர்மமாகவும் உள்ளது. இடைவேளையில் வரும் திருப்பம் பார்வையாளர்களை ஆர்வப்படுத்துகிறது. இடைவேளைக்குப் பிறகு, ஆனந்தின் உண்மை...