Posts

Showing posts with the label Rudra

ஓஹோ எந்தன் பேபி - திரைப்பட விமர்சனம்

Image
  கதைக்களம் ‘ஓஹோ எந்தன் பேபி’ ஒரு இளமைத் துள்ளல் நிறைந்த காதல் திரைப்படம். உதவி இயக்குநரான அஷ்வின் (ருத்ரா) தனது இயக்குநர் கனவை நனவாக்க, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலிடம் கதை சொல்ல செல்கிறார். அவரது முதல் இரு கதைகள் விஷ்ணுவை ஈர்க்கத் தவற, தனது வாழ்க்கையில் நடந்த காதல் அனுபவங்களை கதையாக சொல்ல ஆரம்பிக்கிறார். முதல் இரு காதல்கள் தோல்வியில் முடிய, மூன்றாவதாக மீராவுடன் (மிதிலா பால்கர்) ஏற்படும் காதல் திருமணம் வரை செல்லும் நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால், மீராவின் குடும்ப பின்னணியால் ஏற்படும் மனக்கசப்பு அவர்களை பிரிக்கிறது. இந்தக் கதையை இடைவேளையாக முடித்து, விஷ்ணு விஷால், “மீராவை மீண்டும் சந்தித்து, இரண்டாம் பாதியை உருவாக்கு” என்கிறார். அஷ்வின் மீராவை சந்திக்கச் செல்வதும், அதன் பின் நடப்பதுமே மீதிக்கதை. நடிப்பு ருத்ரா : அறிமுக நடிகராக இருந்தாலும், ருத்ரா தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பள்ளி மாணவன், கல்லூரி இளைஞன், வேலைக்குச் செல்லும் இளைஞன் என மூன்று தோற்றங்களிலும் பொருத்தமாக தெரிகிறார். உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளில் சற்று சிரமப்பட்டாலும், முதல் படத்திற்கு இது நல்ல தொடக்கம். மி...