அனல் மழை பட இசை வெளியீட்டு விழா !!
சாய் பொன்னியம்மன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் அ அய்யனாரப்பன் இயக்கத்தில், ஒரு அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அனல் மழை”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. இயக்குனர் அய்யனாரப்பன் பேசியதாவது, இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த மேடை ஏற எனக்கு 40 வருடங்கள் ஆகியது, பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன் , இப்போது முதன் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளேன் அதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மோகனுக்கு மிகவும் நன்றி, எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, படத்தின் டிரெய்லர் பார்த்து படத்தின் கதையை புரிந்து கொள்ள முடியாது, படம் பார்த்து படத்தை பற்றி சொல்லுங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், சாதிக்க முயற்சிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளியுங்கள், எனக்கு வாய்ப்பளித்த மோகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் திரு கே ராஜன் பேசியதாவது, மழை என்றால் உலகுக்கே குளிர்ச்சி தான...