யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
*ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!* ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”, வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி, உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உகாதி, குடி பட்வா, சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படும் நாளில் வெளியாகவுள்ளதால், இந்தியாவில் நான்கு நாட்கள் நீடிக்கும் விடுமுறை வார இறுதி மூலம் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மார்ச் 20/21 ஆம் தேதி இஃப்தார் பண்டிகையும் வருவதால், ரசிகர்கள் கொண்டாட இது ஏதுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் கன்னட சினிமாவுக்குப் புதிய உயரங்களைத் தரவுள்ள அதே சமயத்தில், உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது. கன்னட மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டு வரும் முதல் பெரிய இந்தியத் திரைப்படம் என்...