மே 9 ஆம் தேதி திரைக்கு வரும் ரோபோ சங்கர் நடித்த " அம்பி "
கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் " அம்பி " T2 Media என்ற புதிய பட நிறுவனம் சார்பில் F. பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு " அம்பி " என்று பெயரிட்டுள்ளனர். மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். மற்றும் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். வெற்றிவேல் முருகன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கன்னடத்தில் அகோரா, நெகிழா தர்மா, மகளே, Tt #50 படங்கள் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் A.B. முரளிதரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி மற்ற...