Posts

Showing posts with the label Uruttu Uruttu Movie Review

உருட்டு உருட்டு – திரைப்பட விமர்சனம்

Image
கதை: கஜேஷ் சிறுவயதில் விளையாட்டில் நண்பனுடன் ஏற்பட்ட பகை, வளர்ந்தும் தொடர்கிறது. பழிவாங்கும் நோக்கில், கஜேஷ் நாயகி ரித்விகாவைப் பற்றி தவறாக பேசியதாக ஒரு வீடியோ காட்டப்படுகிறது. ஆனால் கோபப்பட வேண்டிய ரித்விகா, அதற்கு மாறாக கஜேஷ்யை காதலிக்கிறாள். இந்த காதல் விவகாரம் நாயகியின் தந்தைக்கு தெரியவர, ஊர் திருவிழாவில் கஜேஷ்யை கொலை செய்ய முடிவு எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், கஜேஷின் சிறுவயது நண்பனும் பழிவாங்கும் எண்ணத்தில் கொலை செய்ய திட்டமிடுகிறான். திருவிழா நடந்துகொண்டிருக்கும் போது கஜேஷ் திடீரென காணாமல் போகிறார். இறுதியில் — கஜேஷ் உயிருடன் கிடைத்தாரா? ரித்விகா–கஜேஷ் காதல் நிறைவேறுமா? என்பதே உருட்டு உருட்டு படத்தின் சஸ்பென்ஸ். நடிப்பு: கஜேஷ் நாகேஷ், மது பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கதாபாத்திரத்தை நம்ப வைக்கும் விதமாக நடித்துள்ளார். ரித்விகா ஸ்ரேயா, அறிமுக நாயகி போல இல்லாமல் இயல்பாகவே நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், மூன்று மனைவிகளைக் கொண்ட ‘முனுசாமி’ கதாபாத்திரத்தில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளார். சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் ஆகியோரின...