தனுஷ் நடிப்பில் ‘கர’ – பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘கர’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் சினிமா ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடட் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை, டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிக்கிறார். அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணை தயாரிப்பாளராக செயல்படுகிறார். 90 களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ எனும் இளைஞனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். திரைக்கதையை அவர் அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து எழுதியுள்ளார். இவர்களின் வெற்றிகரமான கூட்டணி இந்தப் படத்திலும் தொடர்கிறது. அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் , படத்தின் பிரம்மாண்டம், மனநிலை மற்றும் கதை ஆழத்தை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தி, விறுவிற...