Posts

Showing posts with the label Vishnu manchu

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்

Image
கதை சுருக்கம்: கண்ணப்பா கதை, காலஹஸ்தி கோயிலில் உள்ள வாயு லிங்கத்தை வணங்கும் பக்தர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று. திண்ணன் (விஷ்ணு மஞ்சு) என்ற இளைஞன், சிறுவயதில் காளி தேவிக்கு நண்பன் நரபலியாக கொடுக்கப்பட்டதால் கடவுள் மீது நம்பிக்கையற்ற நாத்திகனாக வளர்கிறான். ஆனால், விதியின் விளையாட்டால், அவன் எப்படி சிவனின் பக்தனாகி, தன் கண்களையே தானமாக அளித்து கண்ணப்பராக மாறுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கதை. இதில் மகாபாரத இணைப்பும், திண்ணனின் பின்னணி கதையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. படம் எப்படி இருக்கு? படத்தின் முதல் காட்சியிலேயே விஷ்ணு மஞ்சுவின் அறிமுகம் கம்பீரமாக உள்ளது. கழுகு ஒரு குழந்தையை தூக்கிச் செல்லும்போது, திண்ணனாக அவர் செய்யும் சாகசம் பாராட்டு பெறுகிறது. ப்ரீத்தி முகுந்தன் சிவனை வணங்கும் நெமலியாக அழகாகவும், காதல் காட்சிகளில் திறமையாகவும் நடித்திருக்கிறார். மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது. படத்தின் இரண்டாம் பாதி, குறிப்பாக கிளைமேக்ஸ், உணர்ச்சி மயமாகவும், பக்தி பரவசமாகவும் உள்ளது. ம...